×

ரூ.10 கோடி கேட்டு காங். எம்பிக்கு எதிராக அவதூறு வழக்கு: அசாம் முதல்வர் மனைவி நடவடிக்கை

கவுகாத்தி: அசாமின் நகோன் மாவட்டத்தில் உள்ள கலியாபோரில் தரிகாஜி கிராமத்தில் சுமார் 17 ஏக்கர் நிலத்தை முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவின் மனைவி ரினிகி சர்மா நிர்வாக இயக்குனராக இருக்கும் பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வாங்கியது. நிலத்தை வாங்கிய ஒரு மாதத்திற்குள் அது தொழில்துறை நிலமாக மறுவகை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் டிவிட்டரில் பலவேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.ஒன்றிய அரசிடம் மானியம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி கவுரவ்க்கு எதிராக முதல்வரின் மனைவி ரூ.10கோடி கேட்டு அவதூறு வழக்கை நேற்று கம்ரப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

The post ரூ.10 கோடி கேட்டு காங். எம்பிக்கு எதிராக அவதூறு வழக்கு: அசாம் முதல்வர் மனைவி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Assam ,Chief Minister ,Guwahati ,Himanta Biswa ,Dinakaran ,
× RELATED அசாமில் மாபியா ஆட்சி நடக்கிறது: பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு